பரிசல் சேவைக் குழு நண்பர்கள் அனைவருக்கும் நற்செய்தி! 

திருச்சியைச் சேர்ந்த மாணவி முத்துலெட்சுமியின் வாழ்நாள் கனவான மருத்துவப் படிப்பை நனவாக்கி அதை எட்டுவதற்கு பேருதவி செய்த சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் 'அகரம் அறக்கட்டளைக்கு' நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்து பட்டப்படிப்புகளும் வசதி உள்ளவர்கள் மட்டுமே பெற இயலும் என்பது அந்தக் காலம்; இன்றைய நிலையில் அந்த நிலைமை தலைகீழாக மாறி அனைவராலும் பயில இயலும் என்று உணர்த்தும் வகையில் “சமச்சீர் கல்வியை” தருவதில் அகரம் அறக்கட்டளை முனைப்போடு செயல்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்பு வந்த +2 தேர்வு முடிவில் முத்துலெட்சுமி என்ற மாணவி – 1101/1200 மதிப்பெண்கள் எடுத்து தனது பெற்றோருக்கும் தான் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இத்தகைய நல்ல மதிப்பெண்களுடன் தனது வாழ்நாள் கணவான மருத்துவ படிப்பைத் தொடர போதுமான பண வசதி இல்லாத காரணத்தால் "தனது கனவு நனவாகுமா?" என்று கேள்விக் குறிகயோடு இருந்த முத்துலெட்சுமிக்கு நமது பரிசல் சேவைக் குழு, அகரம் அறக்கட்டளைக்கு வழி காட்டியது.



மே 12ஆம் தேதி மாணவி முத்துலெட்சுமியின் அனைத்து சான்றிதழ் மற்றும் வேண்டுகோள் கடிதம் ஆகியவை அகரம் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டன. அனுப்பிய மறுநாளே அகரம் உறுபினர்கள் முத்துலெட்சுமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விசாரித்தனர். முத்துலெட்சுமியின் வேண்டுகோளை பரிசீலனை செய்து விரைவில் தொடர்பு கொள்வதாக தெரிவித்தனர். முத்துலெட்சுமியின் கனவு நனவானது. மருத்துவம் பயில அனைத்துப் பண உதவிகளையும் அகரம் கல்வி அறக்கட்டளையே ஏற்று நடத்தும் என்று உறுதி அளித்தது. இந்த செய்தியைக் கேட்ட முத்துலெட்சுமி மற்றும் அவரின் குடும்பத்தார் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை கண்ட நம் மனமும் நிறைந்தது.




இதற்கு ஒத்துழைத்த நம் பரிசல் குழு வழிகாட்டிகள் திவ்யா , ராய்டன் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்! தங்கள் பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமியை போல உயர்ந்த கனவுகளோடு வரும் அனைத்து மாணவர்களுக்கும், 'அகரம் அறக்கட்டளை' உதவி கரம் நீட்டி தங்களை சிகரத்துக்கு கொண்டு செல்ல தயாரக உள்ளது.
இலவச கல்வி எவ்வாறு பெறுவது; அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது!
அகரம் அறக்கட்டளையை அணுகும் முறை பின்வருமாறு:

கல்வி உதவி பெற போகும் மாணவரின்/மாணவியின்
1) 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் (10th Mark sheet copy)
2) 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் (12th Mark sheet copy)
3) பயின்ற பள்ளியில் இருந்து “உண்மையான சான்றிதழ்” நகல் (Bonafide certificate copy)
4) அடையாள அட்டை நகல் (ID card copy)
5) உண்மை நிலவரத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்வி உதவி வேண்டி தலைமை ஆசிரியரின் கையெழுத்துடன் கூடிய தெளிவான கடிதம். (Education help request letter with Head Master's signature).

மேற்கண்டவாறு அனைத்தையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைப்பது தான் நம் வேலை, அதன் பிறகு அகரம் அறக்கட்டளை தங்களை வழி நடத்திச் செல்லும்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அகரம் அறக்கட்டளை
29, விஜய் என்கிளேவ் கிருஷ்ணா தெரு, தி நகர்,
சென்னை, தமிழ்நாடு, 600017, இந்தியா. தொலைபேசி: +91 44 4350 6361

Contact Address:
Agaram Foundation ,
29, Vijay enclave Krishna St,
T Nagar, Chennai, Tamil Nadu 600017, India
Phone:+91 44 4350 6361

ஒரு குடும்பத்தின் சூழ்நிலையை உணர்ந்து பெரும் சேவையை செய்து கொண்டிருக்கும் அகரம் அறக்கட்டளைக்கு மனமார்ந்த நன்றியை, நம் பரிசல் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்!!!

இவண்,
பரிசல் சேவைக் குழு
“ இணைந்த கைகள் துணிந்து நிற்கும்! ஒற்றுமையே வலிமை “

0 Comments