பரிசல் தோழமைகளுக்கு வணக்கம்....
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
ஆயிரம் அன்ன சத்திரங்கள் அமைத்து பசித்துக்கிடப்பவர்களின் பசியை போக்குவதை காட்டிலும்.... மக்கள் வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கில் கோவில்களை கட்டுவதை காட்டிலும் புண்ணியம் நிறைந்தது "
ஒரு ஏழையின் கல்விக்கு உதவுதல் என்றான் மகாகவி பாரதி.
ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ கல்விக்கான உதவி செய்வதின் புண்ணியத்தை இதைவிட அழுத்தமாய் யாரும் சொல்லியிருக்க முடியாது.
திருச்சி குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு வேதியியல் படிக்கும் மாணவி லாவண்யா செமஸ்டர் கட்டணம் கட்ட முடியாமல் பரிதவிக்கும் செய்தி பரிசலின் செவிகளை எட்டியவுடன் லாவண்யாவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பை பரிசல் சேவைக்குழு கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியது.
கல்லூரி நிர்ணயித்த கால அளவிற்குள் முதல் செமஸ்டருக்கான எட்டாயிரம் ரூபாயை எப்படியும் கட்டியாக வேண்டும் என்பதே பரிசலின் முதல் மற்றும் முக்கிய குறிக்கோளாய் இருந்தது.
தன்னம்பிக்கையுடன் தகவல்களை பரிமாறியபோது ஓடி வந்து உதவி செய்த பரிசல் சொந்தங்களை ஒரு பொழுதும் மறக்க முடியாது.
அந்த ஈர இதயங்களின் உதவியுடன் லாவண்யாவிற்கான முதல் செமஸ்டர் கட்டணத்தை கட்டிவிட்டோம்
தீர்ந்துவிடவில்லை.
முதல் வருடத்தின் இரண்டாவது செமஸ்டருக்கான கட்டணத் தேதி முடிவடையும் தருவாயில் உள்ளது.... அடுத்த வருடத்தின் இரண்டு செமஸ்டருக்கான கட்டணமும் தேவைப்படுகிறது....
குடும்பப் பின்புலமாய் வறுமையை மட்டுமே வைத்திருக்கும் அந்த சகோதரியால் இந்த கட்டணத்தை கட்டமுடியாது என்பது நிதர்சனம்.
பணத்தின் பெயரால் ஒரு பெண்ணின் படிப்பு பழிவாங்கப்படுவதில் பரிசலுக்கு உடன்பாடில்லை எனவே.
மனசு முழுக்க நம்பிக்கையுடன் திரும்பிய திசையிலெல்லாம் எங்கள் முயற்சிக் கரங்களை நீட்டி நிற்கிறோம்.
உதவுங்கள் நண்பர்களே.... நீங்கள் வீசி எறியும் ஒரு நாணயம் கூட லாவண்யாவை சூழ்ந்திருக்கும் தற்காலிக இருளில் ஒரு துளி வெளிச்சத்தை விதைக்கும்.
துளித்துளியாய் விழுந்த மழைதான் இன்று பூமியின் முக்கால் பகுதியை கடலாய் சூழ்ந்து கம்பீரமாய் நிற்கிறது.
ஒவ்வொரு துளியாய் வெளிச்சம் வாங்கி அந்த பெண்ணின் வாழ்வில் ஒளியேற்றத்தான் உங்களை நோக்கி எங்களின் கைகளை நம்பிக்கையுடன் நீட்டி நிற்கிறோம்.
ஒரு பெண்ணின் கல்வி ஒரு சமூகத்தையே மாற்றியமைக்கும் வல்லமை நிறைந்தது. அப்படிப்பட்ட கல்வி கேவலம் பணத்தின் முன் மண்டியிட வேண்டுமா.....? சித்தித்து உடனே உதவுங்கள்.
தேவைப்படும் தொகை....
முதல் செமஸ்டருக்கான கட்டணம் 8000 கட்டப்பட்டு விட்டது....
மொத்தத்தில் இன்னும் மூன்று செமஸ்டர்கள் மீதமுள்ளது..... ஒரு செமஸ்டருக்கு 8000 வீதம் இன்னும் 24000 ரூபாய் தேவைப்படுகிறது.
காத்திருக்கிறோம் நீங்கள் விதைக்கப்போகும் வெளிச்சத்தை எதிர்பார்த்து.
-பரிசல் சேவைக்குழு-
முதல் செமஸ்டருக்கான 8000 ரூபாயை தந்து உதவிய அன்பிற்கினிய நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறோம்.
https://www.facebook.com/media/set/?set=a.617550625035074.1073741830.206421929481281&type=3
0 Comments